அதிக ஓட்டம், அதிக சிக்சர், அதிக பவுண்டரி - ஒரே போட்டியில் தகர்க்கப்பட்ட சாதனைகள்

தென்னாப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே செஞ்சூரியனில் மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகள் தகர்க்கப்பட்டன. 
இப்போட்டியில் முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களை விளாசியது. ஆனாலும், ஏழு பந்துகள் எஞ்சியிருக்க, நான்கு விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து, இலக்கை எட்டி வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா.

சாதனைகளின் பட்டியல் இதோ:

517 - வெஸ்ட் இண்டீசும் தென்னாப்பிரிக்காவும் சேர்ந்து எடுத்த ஓட்டங்களின் எண்ணிக்கை. டி20 போட்டியில் 500 ஓட்டங்களுக்குமேல் எடுக்கப்பட்டது இதுவே முதன்முறை.

0 - வெஸ்ட் இண்டீசும் தென்னாப்பிரிக்காவும் இதற்குமுன் டி20 போட்டியில் 250 ஓட்டங்களுக்குமேல் எடுத்ததில்லை.

81 - புதிய சாதனையாக இரண்டாவது டி20 போட்டியில் 81 முறை பந்து எல்லைக்கோட்டைக் கடந்தது. இதில் 46 நான்குகளும் 35 சிக்சர்களும் அடங்கும். இம்மாதத் தொடக்கத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் 78 முறை பந்து எல்லையைத் தாண்டியிருந்ததே முன்னைய சாதனை.

35 - இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீசும் (22) தென்னாப்பிரிக்காவும் (13) இணைந்து 35 சிக்சர்களை விளாசி புதிய சாதனை படைத்தன. 2022ல் பல்கேரியா-செர்பியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 33 சிக்சர்கள் அடிக்கப்பட்டிருந்ததே முன்னைய சாதனை.

102 - ‘பவர் பிளே’ எனப்படும் முதல் ஆறு ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி குவித்த ஓட்டங்கள். 2021ல் இலங்கை அணிக்கெதிராக வெஸ்ட் இண்டீஸ் ‘பவர் பிளே’யில் 98 ஓட்டங்களைக் குவித்ததே  அனைத்துலக ஆண்கள் டி20 போட்டிகளில் முன்னைய சாதனை. தென்னாப்பிரிக்க அணி 5.3 ஓவர்களில் நூறைத் தொட்டது.  

15 - ஐம்பது ஓட்டங்களை எடுக்க தென்னாப்பிரிக்காவின் குவின்டன் டி காக் சந்தித்த பந்துகளின் எண்ணிக்கை. தென்னாப்பிரிக்க வீரர்களைப் பொறுத்தமட்டில், இதுவே ஆக விரைவாக அடிக்கப்பட்ட அரைசதம்.

39 - வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான்சன் சார்ல்ஸ் சதமடிக்க எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை. அனைத்துலக டி20 போட்டிகளில் விரைவாக அடிக்கப்பட்ட நான்காவது சதம் இது. வெஸ்ட் இண்டீசைப் பொறுத்தவரை, இதுவே குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம். இதற்குமுன் கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் சதமடித்ததே முன்னைய சாதனையாக இருந்தது.

தகவல்: இஎஸ்பின்கிரிக்இன்ஃபோ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!