தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரசிகருக்குப் பரிசளித்து மகிழ்வித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்

1 mins read
a4655df6-d6f5-4240-a5c8-890825183b38
ரசிகருக்குக் கைக்காப்பு அணிவிக்கும் ரிஷப் பன்ட். - காணொளிப்படம்: வைரல் பயானி / இன்ஸ்டகிராம்
multi-img1 of 2

புதுடெல்லி: தன் ரசிகர் ஒருவரின் பிறந்தநாளன்று அவருக்குக் கைக்காப்பு பரிசளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவருமான ரிஷப் பன்ட்.

நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்த ரிஷப்பின் இச்செயல் குறித்த காணொளி இன்ஸ்டகிராம் வழியாகப் பகிரப்பட்டுள்ளது.

அதில், தம்முடைய சமூக ஊடக ரசிகர் மன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு ரிஷப் கைக்காப்பு அணிவிப்பதும் அதனால் பெருமகிழ்ச்சியடைந்த அந்த ரசிகர், ரிஷப்பைத் தழுவிக்கொள்வதும் தெரிகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சுற்றில் 14 ஆட்டங்களையும் விளையாடி முடித்துவிட்ட டெல்லி அணி, 14 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால், அடுத்த சுற்று வாய்ப்பை அவ்வணி இழந்துவிட்டது.

ஆயினும், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கெதிரான கடைசிப் போட்டியில் 19 ஓட்ட வித்தியாசத்தில் வென்று, நம்பிக்கையுடன் ஐபிஎல் தொடரை முடித்துள்ளது டெல்லி அணி.

இப்பருவத்தில் டெல்லி அணி சார்பில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் ரிஷப்தான். அவர் 13 ஆட்டங்களில் விளையாடி, மூன்று அரைசதங்கள் உட்பட 446 ஓட்டங்களைக் குவித்தார்.

அடுத்த மாதம் 1 - 29 தேதிகளில் அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடக்கவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியிலும் ரிஷப் இடம்பெற்றுள்ளார்.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்