ரோகித் சர்மா முத்தான சாதனை

ரோகித் சர்மா முத்தான சாதனை

1 mins read
3d59febe-9c44-4e0c-a517-33093aeea330
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகை கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய அணித்தலைவரானார் ரோகித் சர்மா. படம்: ஏஎஃப்பி -

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசினார்.

இது டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு ஒன்பதாவது சதம்.

இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமையை ரோகித் தன்வயப்படுத்தினார்.

அனைத்துலக அளவில் இச்சாதனையைப் படைத்த 4வது அணித்தலைவர் அவர்தான். இதற்குமுன் பாபர் ஆசம் (பாகிஸ்தான்), ஃபாஃப் டு பிளஸ்ஸி (தென்னாப்பிரிக்கா), திலகரத்னே தில்ஷன் (இலங்கை) ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.