காற்பந்து: புதிய சாதனை படைத்தார் ரொனால்டோ

காற்பந்து: புதிய சாதனை படைத்தார் ரொனால்டோ

1 mins read
02645f4a-2b22-4756-acaf-6aaaf6dc1944
பிரான்ஸ் குழுவுடன் பொருதிய ஆட்டத்தில் இரண்டாம் கோலை அடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் போர்ச்சுகல் நட்சத்திரம் ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ் -

யூரோ 2020 குருப் 'ஃப்' காற்பந்து ஆட்டத்தில் நேற்று போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு முறை கோல் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தினார்.

முன்னாள் ஈரான் ஆட்டக்காரர் அலி டாயி 109 கோல்களுடன் ஆக அதிக அனைத்துலக கோல்களை புகுத்திய சாதனையாளர்.

நேற்றைய ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த கோல்கள் மூலம் தாமும் அச்சாதனைக்கு ஈடாக 109 அனைத்துலக கோல்கள் இலக்கை அடைந்துவிட்டார்.

போர்ச்சுகல் குழு 2-2 என்ற கோல் கணக்கில் நேற்றைய ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் சமநிலை கண்டு போட்டியின் 'ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு குருப் 'ஃப்' ஆட்டத்தில் ஜெர்மனி குழு ஹங்கேரி குழுவுடன் பொருதிய ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

குருப் 'ஃப்' பட்டியலிலிருந்து, ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுகல் ஆகிய மூன்று காற்பந்து ஜாம்பவான்களும் போட்டியின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.

குருப் 'இ' ஆட்டத்தில், நேற்று ஸ்பெயின் அணி ஸ்லோவாக்கியா குழுவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

மற்றொரு குருப் 'இ' ஆட்டத்தில், சுவீடன் குழு போலந்து குழுவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

குருப் 'இ' பட்டியலிருந்து சுவீடனும் ஸ்பெயினும் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன.