லிஸ்பன்: முன்னணிக் காற்பந்து வீரரான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து நான்காவது ஆண்டாக அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டாளராகத் திகழ்கிறார்.
இந்த ஆண்டிற்கான ‘அதிக வருமானம் ஈட்டும் 50 விளையாட்டாளர்கள்’ பட்டியலை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வெள்ளிக்கிழமை (மே 22) வெளியிட்டது.
அவர் 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டுவதாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
மெக்சிகோ குத்துச்சண்டை வீரர் கெனலோ அல்வரெஸ் (170 மில்லியன் டாலர்) இரண்டாம் இடத்திலும் அர்ஜென்டினா காற்பந்துக் குழுத்தலைவர் லயனல் மெஸ்ஸி (140 மில்லியன் டாலர்) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
அவர்கள் திடலிலும் திடலுக்கு வெளியிலும் ஈட்டும் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதிக வருமானம் ஈட்டும் முதல் 50 விளையாட்டாளர்களின் ஒட்டுமொத்த வருமானம் கடந்த 2018ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இப்போது அது 4.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

