பட்டத்தைத் தக்கவைத்த பெலருஸ் வீராங்கனை

பட்டத்தைத் தக்கவைத்த பெலருஸ் வீராங்கனை

1 mins read
cd088e59-1f5e-442f-b398-146c875fa061
ஆஸ்திரேலியப் பொது விருது வெற்றியாளர் கிண்ணத்துடன் அரினா சபல்யெங்கா. - படம்: ஏஎஃப்பி

மெல்பர்ன்: மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியப் பொது விருதைத் தக்கவைத்துக்கொண்டார் பெலருஸ் டென்னிஸ் வீராங்கனை அரினா சபல்யெங்கா.

உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலையில் இருக்கும் 25 வயது சபல்யெங்கா, இறுதிப் போட்டியில் 12ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஸெங் சின்வென்னை 6-3, 6-2 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்தார்.

சென்ற ஆண்டிலும் சபல்யெங்காவே பட்டம் வென்றிருந்தார்.

இதன்மூலம், 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலியப் பொது விருதைத் தக்க வைத்துக்கொண்ட முதல் வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றார்.

நடப்பு ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டிகளில் சபல்யெங்கா ஒரு செட்டைக்கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) நடக்கவிருக்கும் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவும் இத்தாலியின் யானிக் சின்னரும் பொருதவுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்