கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் தமது 50ஆவது வயதை எட்டினார்.
ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்த சச்சினுக்கு அவரது ரசிகர்களும் கிரிக்கெட் உலகின் முன்னணி வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ், ஏப்ரல் 22ஆம் தேதி வான்கடே விளையாட்டரங்கில் பெரிய ஏற்பாடுகள் செய்திருந்தது.
இருப்பினும் சச்சின் தமது 50ஆவது பிறந்தநாளன்று எந்த ஒரு பெரிய கொண்டாட்டங்களும் இல்லாமல் எளிமையாக ஒரு குக்கிராமத்தில் தமது குடும்பத்தினருடன் சமைத்து நேரத்தை செலவிட்டார்.
அதுதொடர்பான படத்தையும் அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
சச்சின் மணல் அடுப்பில் சமைப்பதைப் படத்தில் காணமுடிந்தது.
தமது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் தன் பிறந்தநாள் அன்று குடும்பத்தினருடன் கலந்துகொள்ள முடியாமல் போனதைப் பற்றியும் சச்சின் குறிப்பிட்டார்.
சச்சின் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் அவர் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.


