விடைபெற்றார் சானியா!

விடைபெற்றார் சானியா!

1 mins read
545d0bce-682d-4a9b-82fc-2c1d80cc58bd
படம்: இபிஏ -

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா அனைத்துலக டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

நேற்று (பிப்ரவரி 21) துபாயில் தனது கடைசி போட்டியில் விளையாடினார் சானியா.

36 வயதான சானியா 2015ஆம் ஆண்டு மகளிர் இரட்டையர் பிரிவுத் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

அவர் மகளிர் இரட்டையர் பிரிவிலும் மூன்றுமுறை பொது விருதுப் பட்டம் (கிராண்ட் ஸ்லாம்) வென்றுள்ளார்.

சானியா கலப்பு இரட்டையர் பிரிவிலும் மூன்று முறை பொதுவிருதுகளை வென்றுள்ளார்.

சானியா 43 முறை WTA விருதுகளை வென்று சாதித்துள்ளார்.