ஐபிஎல் போல் சவுதி அரேபியாவிலும் கிரிக்கெட் நடத்த திட்டம்

ஐபிஎல் போல் சவுதி அரேபியாவிலும் கிரிக்கெட் நடத்த திட்டம்

1 mins read
b04ef572-4d63-4adb-93d3-a39cbc0f57cd
படம்: பிசிசிஐ -

பெரிய அளவில் பணம், புகழ், சமூக ஊடகங்களில் வளர்ச்சி என தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஐபிஎல் தொடரைப் போல் மற்றொரு கிரிக்கெட் தொடரை நடத்த சவுதி அரேபியா எண்ணுகிறது.

தற்போது அதுகுறித்து சவுதி அரேபியா, ஐபிஎல் அணி உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போல தமது நாட்டிலும் ஒரு பெரும் கிரிக்கெட் தொடரை நடத்தி கவனத்தை ஈர்க்க சவுதி அரேபியா கடந்த ஓர் ஆண்டாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய வீரர்களை மற்ற நாட்டு உள்ளூர் டி20 தொடர்களில் விளையாட அனுமதிப்பதில்லை. சவுதி அரேபியாவில் கிரிக்கெட் போட்டி நடந்தால் இந்திய வீரர்கள் அதில் இருக்க வேண்டும் என்பது அதன் திட்டம்.

ஆசியக் கிரிக்கெட் கிண்ணம், ஐபிஎல் போட்டியின் சில ஆட்டங்களையும் ஏற்று நடத்த சவூதி அரேபியா திட்டம் தீட்டிவருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே காற்பந்து, ஃபார்முலா 1 கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளில் கால்தடம் பதித்துள்ள சவுதி அரேபியா தற்போது கிரிக்கெட் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்