சச்சினை கெளரவப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியா

1 mins read
16a1bb9b-e4d9-4553-8994-0e0874cff76f
படம்: சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கம் -

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவை கெளரவித்துள்ளது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கம்.

இரு வீரர்களின் நினைவாக அந்த விளையாட்டரங்கின் நுழைவாயிலுக்கு இருவரது பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

பிரையன் லாரா-சச்சின் டெண்டுல்கர் நுழைவாயிலைக் கடந்துதான் ஆடுகளத்துக்குள் வெளிநாட்டு அணியின் வீரர்கள் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் தமது 50-வது பிறந்தநாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 24) கொண்டாடினார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கம் அறிவிப்பை வெளியிட்டது.

சிட்னியில் சச்சின் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்களுடன் 785 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்