சிங்கப்பூரின் ஒரேயொரு ஒலிம்பிக் வெற்றியாளரான நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், 27, வரும் மே மாதம் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கமாட்டார். அவர் முதன்முதலாக 2011ல் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டார்.
அது முதல் இதுவரை தென்கிழக்காசிய போட்டிகளில் ஸ்கூலிங் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.
2011க்குப் பிறகு இப்போதுதான் அவர் முதன்முதலாக சிங்கப்பூரை பிரதிநிதிக்கப்போவதில்லை.
ஆடவர் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள ஸ்கூலிங் தகுதிபெற்று இருந்தார்.
ஆடவர் 4x100 மீட்டர் போட்டிக் குழுவிலும் இடம்பெற அவர் தகுதிபெற்று இருந்தார். ஆனால், புதன்கிழமை (மார்ச் 1) வெளியிடப்பட்ட சிங்கப்பூர் நீச்சல் வீரர்கள் சங்கத்தின் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெறவில்லை.
வியட்னாமின் நோம் பென் நகரில் மே 5 முதல் 17 வரை நடக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 22 நீச்சல் வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.



