பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் (சீ கேம்ஸ்) சிங்கப்பூர் அதன் முதல் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
பூப்பந்தில் பெண்கள் குழுப் பிரிவில் சிங்கப்பூர் வீராங்கனைகள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். போட்டியின் அரையிறுதிச் சுற்றில் நடப்பு வெற்றியாளரான தாய்லாந்திடம் 3-0 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியடைந்தது சிங்கப்பூர்.
தம்மாசாம் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 8) அரையிறுதியாட்டம் நடைபெற்றது. சிங்கப்பூர் அணியில் முன்னாள் தேசிய வீரர் ஹமீது கானின் மகளான 24 வயது இன்சைரா கானும் உள்ளார்.
திங்கட்கிழமை நடக்கும் ஆண்கள் குழுப் பிரிவு அரையிறுதியாட்டத்தில் சிங்கப்பூர், நடப்பு வெற்றியாளர் இந்தோனீசியாவைச் சந்திக்கும்.

