அடுத்த செல்சி நிர்வாகிக்கான தேடல்; அமைதிகாக்கும் லியாம் ரொசனியர்

1 mins read
797b526d-fdc7-4fe5-9348-c03d48666b4b
லியாம் ரொசனியர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஸ்ட்ராஸ்போர்க் (பிரான்ஸ்): செல்சியில் அடுத்த நிர்வாகியாக லியாம் ரொசனியர் நியமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது பிரான்சின் ஸ்ட்ராஸ்போர்க் குழுவின் நிர்வாகியாக இருக்கும் ரொசனியர் இதுகுறித்து கருத்து எதுவும் வெளியிடவில்லை.

“வதந்திகளைக் கண்டுகொள்ளவில்லை,” என்று ரொசனியர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) கூறினார்.

கடந்த ஏழு இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களில் செல்சி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. அதனையடுத்து கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 1) மரெஸ்கா பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், மான்செஸ்டர் சிட்டியின் அடுத்த நிர்வாகியாகப் பொறுப்பேற்பது குறித்து அவர் பலமுறை சிட்டி நிர்வாகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“எனது பணி இங்குதான் உள்ளது. இக்குழுவை (ஸ்ட்ராஸ்போர்க்) நான் மிகவும் விரும்புகிறேன். நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் வெற்றிகாணும் முயற்சியில் இறங்கியுள்ளேன்,” என்று ரொசனியர் கூறினார்.

ஸ்ட்ராஸ்போர்க்கின் உரிமையாளர்க் குழு, செல்சிக்கும் உரிமை வகிக்கும் நிறுவனம் புளூக்கோ ஆகும்.. ஸ்ட்ராஸ்போர்க் நிர்வாகியாகத் தனது முதல் பருவத்தில் அக்குழுவை பிரெஞ்சு லீக் பட்டியலில் ஏழாவது இடத்தில் முடிக்க வைத்துச் சிறப்பாகச் செய்தார் ரொசனியர்.

குறிப்புச் சொற்கள்