ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு; டி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து முக்கிய வீரர் விலகல்

ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு; டி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து முக்கிய வீரர் விலகல்

1 mins read
047f9125-bd9f-4371-ba54-da1e6bf49b95
20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. - படகம்: மாலைமலர்

புதுடெல்லி: 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

இதனிடையே 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த கம்மின்ஸ், ஹேசல் வுட், டிம் டேவிட் ஆகியோரும் அணியில் இடம்பெற்று இருந்தனர்.

இந்நிலையில், டி20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும், மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகினார். இதனால் மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியில், மிச்சேல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கனோலி, கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாட் குனெமன், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா, பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்