தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து முன்னணி ஆட்டக்காரர் விலகல்

1 mins read
23e4dfc5-149e-4c55-a9ff-00d357d041cf
இலங்கைக்கு எதிரான போட்டியின்போது பங்ளாதேஷ் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசனுக்கு விரல் முறிந்தது. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலிருந்து பங்ளாதேஷ் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.

இதுவரை எட்டு ஆட்டங்களில் விளையாடி, இரண்டில் மட்டும் வென்றுள்ளதால் பங்ளாதேஷ் அணி முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.

அடுத்ததாக, இம்மாதம் 11ஆம் தேதி புனே நகரில் நடைபெறும் ஆட்டத்தில் அவ்வணி ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.

அதற்காக பங்ளாதேஷ் அணியினர் புனே புறப்பட்டுச் சென்ற நிலையில், அணித்தலைவர் ஷாகிப் பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவிற்குக் கிளம்பினார்.

இலங்கை அணிக்கெதிராக திங்கட்கிழமை நடந்த போட்டியில் பங்ளாதேஷ் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அப்போட்டியின்போது ஷாகிப்பிற்கு இடக்கை ஆட்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும், ஒட்டுப்பட்டைகள், வலிநீக்கியின் உதவியுடன் அவர் தொடர்ந்து பந்தடித்தார்.

ஷாகிப் குணமடைய மூன்று, நான்கு வாரங்களாகலாம் என்று கூறப்படுகிறது.

அவருக்குப் பதிலாக அனாமுல் ஹக் பங்ளாதேஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நஸ்முல் ஹொசைன் சான்டோ பங்ளாதேஷ் அணித்தலைவராகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்