தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வில்லியம்சன், ஷாகிப் அல் ஹசன் காயம்

1 mins read
b40ec1bc-eb32-4279-bd81-9a68c2278720
பங்ளாதேஷ் அணிக்கெதிராக சென்னையில் நடந்த போட்டியின்போது இடக்கைப் பெருவிரலில் காயமடைந்தார் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் (இடது). - படம்: ஏஎஃப்பி

சென்னை: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசனும் நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனும் வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியின்போது காயமடைந்தனர்.

ஷாகிபுக்கு இடது தொடையில் காயமேற்பட்டது. அதுபோல, வில்லியம்சனுக்கு இடக்கைப் பெருவிரலில் காயமேற்பட்டது.

வெள்ளிக்கிழமையே ஷாகிப் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். வில்லியம்சன் சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதாகச் சொல்லப்பட்டது.

பங்ளாதேஷுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறிப்புச் சொற்கள்