தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாந்தி பெரேரா 200 மீட்­டர் ஓட்­டப் பந்­த­யத்­தில் சாதனை

1 mins read
433b1b7b-9698-44d0-893a-38836165820c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஓட்­டப் பந்­த­ய வீராங்கனை சாந்தி பெரேரா ஒவ்வொரு நாளும் தமது ஓட்டத்தில் வேகம் கூட்டி வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) அவர் மேலும் ஒரு தேசிய சாதனையை நிகழ்த்தினார்.

பிரிஸ்பன் நகரில்ஆஸ்­தி­ரே­லி­யப் பொதுவிருது திடல்­தடப் போட்டி­ நடந்து வருகிறது. அதில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 200 மீட்­டர் ஓட்­டப் பந்­த­யத்தின் தகுதிச்சுற்றில் பெரேரா 22.89 நொடி­களில் ஓடி முடித்தார்.

இது, இதற்கு முந்திய அவரது சாதனை நேரத்தைவிட 0.27 நொடி குறைவு. கடந்த மார்ச் 25ஆம் தேதி 200 மீட்டர் ஓட்டத்தை சாந்தி பெரேரா 23.16 நொடி­களில் முடித்தார்.

சிங்கப்பூர் பெண்கள் ஓட்­டப் பந்­த­யத்தில் 200 மீட்டர் பந்தயத்தை 23 நொடி­களுக்குக் கீழ் ஓடி முடித்த ஒரே வீராங்கனை சாந்தி பெரேராதான்.

கடந்த மூன்று நாள்களாக ஓட்­டப் பந்­த­யத்தில் சாந்தி பெரேரா சாதனை மேல் சாதனை புரிந்து வருகிறார்.

சனிக்கிழமை (ஏப்ரல் 1) நடந்த 100 மீட்­டர் ஓட்­டப் பந்­த­யத்­தில் சாந்தி பெரேரா வாகை சூடி­னார்.

இறு­திச் சுற்­றில் அவர் புதிய தேசிய சாத­னை­யை­யும் படைத்­தார். பந்­த­யத்தை முடிக்க அவர் 11.37 நொடி­க­ள் மட்டுமே எடுத்­துக் கொண்­டார்.

கடந்த ஒரு மாதத்­தில் 100 மீட்டர் ஓட்டத்தில் மும்­முறை அவர் தமது சொந்த தேசிய சாத­னையை முறி­ய­டித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

குறிப்புச் சொற்கள்