ஒரே மாதத்தில் இருமுறை தேசிய சாதனை படைத்த சாந்தி பெரேரா

ஒரே மாதத்தில் இருமுறை தேசிய சாதனை படைத்த சாந்தி பெரேரா

1 mins read
6866c259-627a-4acf-a91b-a424e436c441
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மீண்டும் தேசிய சாதனையை முறியடித்துள்ளார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா (கோப்புப் படம்).

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியப் பொதுவிருது திடல்தடப் போட்டிகளில் சாதனை படைத்தார் சாந்தி.

100 மீட்டர் பந்தயத்தை 11.38 விநாடியில் முடித்தார் சாந்தி. இதற்கு முன்பு தான் படைத்த தேசிய சாதனையையே 0.08 விநாடி வித்தியாசத்தில் இவர் முறியடித்தார்.

சென்ற மாதம் மூன்றாம் தேதியன்று நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து திடல்தடப் போட்டிகளின் 100 மீட்டர் பிரிவில் சாந்தி தேசிய சாதனை படைத்திருந்தார்.

நேற்றைய சாதனையைத் தொடர்ந்து இவர் ஆஸ்திரேலிய போட்டிகளின் 100 மீட்டர் பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதிச் சுற்று இன்று நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்