பேங்காக்: வியாழன் (டிசம்பர் 11) நடந்த 33வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சாந்தி பெரேரா, 100 மீட்டர் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொண்டார்.
பேங்காக்கில் உள்ள சுப்பாச்சலாசாய் தேசிய விளையாட்டரங்கில், அன்றைய தினம் மாலை நடந்த தகுதிச் சுற்றில் 11.46 வினாடிகளில் வெற்றி பெற்ற அந்தச் சிங்கப்பூர்த் திடல்தட வீராங்கனை, இறுதிப் போட்டியில் 11.37 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
2023-ல் நடந்த கடைசிப் பதிப்பு விளையாட்டுப் போட்டிகளில் பெரேரா 100 மீ மற்றும் 200 மீ இரண்டிலும் வெற்றி பெற்றார். அதன் மூலம், ஈராண்டுக்கு ஒரு முறை நடக்கும் இப்போட்டியில், ஸ்ப்ரிண்ட் இரட்டையை வென்ற முதல் சிங்கப்பூர் பெண்மணியாகத் திகழ்கிறார்.
அதே ஆண்டு பிற்பகுதியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் 200 மீட்டருக்கான தங்கப் பதக்கம் ஒன்றையும் வெள்ளிப் பதக்கம் ஒன்றையும் வென்றார்.

