தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கிழக்காசிய விளையாட்டுகள்: சாந்தி பெரேரா 200.மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்

1 mins read
7170f9e6-0d0f-4dc7-8526-f1ab49166fdb
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, கம்போடியாவில் நடந்துவரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாந்தி மூன்றாவது முறையாக தங்கம் வென்றுள்ளார்.

சாந்தி பந்தயத்தை 22.69 நொடிகளில் முடித்து தென்கிழக்காசிய போட்டிகளில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் போட்டியின் சாதனை 23.01 வினாடியாக இருந்தது.

சாந்தி புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் அது 22.89 வினாடியாக இருந்தது.

இரண்டாம் இடத்தில் வியட்நாமின் தி நி யென் டிரானும் , மூன்றாம் இடத்தில் மலேசியாவின் சைத்துல் ஹஸ்னிய ஸூல்கிஃபிலியும் வந்தனர்.

சாந்தி வரும் வெள்ளிக்கிழமை 4x100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்