ஷெஃபீல்டு: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஷெஃபீல்டு யுனைடெட் நெருங்கியுள்ளது.
திங்கட்கிழமை (மே 12) நடைபெற்ற அரையிறுதிச் சுற்றுக்கான இரண்டாவது ஆட்டத்தில் பிரிஸ்டல் சிட்டியை அது 3-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
ஒட்டுமொத்த கோல் கணக்கில் 6-0 என பிரிஸ்டல் சிட்டியை ஷெஃபீல்டு யுனைடெட் புரட்டி எடுத்தது.
இதையடுத்து, மே 24ஆம் தேதி வெம்பிளி விளையாட்டரங்கில் நடைபெறும் இறுதிச் சுற்று ஆட்டத்தில் சண்டர்லேண்ட் அல்லது கொவென்ட்ரி குழுவுடன் ஷெஃபீல்டு யுனைடெட் மோதும். அதில் வெற்றி பெறும் குழு பிரிமியர் லீக்கிற்கு முன்னேறும்.
மற்றோர் அரையிறுதிச் சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் சண்டர்லேண்ட் குழுவும் கொவென்ட்ரியும் மோதின. அதில் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்ற சண்டர்லேண்ட், முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை (மே 13) நடைபெறுகிறது.