'விரைவில் ஷோலே 2'

'விரைவில் ஷோலே 2'

1 mins read
5b8b3af6-5e24-4e78-b920-240dfee8872d
'சைட்கார்' உடைய பழைய மோட்டார்சைக்கிள் ஒன்றில் டோனியுடன் சேர்ந்து தான் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்றை வியாழக்கிழமை (ஜனவரி 26) டுவிட்டரில் பகிர்ந்தார் பாண்டியா. படம்: இன்ஸ்டகிராம்/ஹர்திக் பாண்டியா -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையேயான தோழமை பலரும் அறிந்ததே.

கிரிக்கெட் ஆட்டங்களின்போது நெருக்குதலான தருணங்களில் தமக்கு நிதானமான உணர்வை அளித்தவர் டோனி என்று பாண்டியா அடிக்கடி கூறுவார்.

இந்நிலையில், 'சைட்கார்' உடைய பழைய மோட்டார்சைக்கிள் ஒன்றில் இந்தியப் பெருமகன் டோனியுடன் சேர்ந்து தான் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்றை வியாழக்கிழமை (ஜனவரி 26) டுவிட்டரில் பகிர்ந்தார் பாண்டியா.

அப்பதிவில், 'விரைவில் ஷோலே 2' என்று பாண்டியா குறிப்பிட்டார்.

இந்தியத் திரைப்பட ரசிகர் ஒவ்வொருவரும், பாண்டியா என்ன சொல்கிறார் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பர். பாலிவுட் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றிகண்ட 'ஷோலே' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சைட்கார்' உடைய இதுபோன்ற மோட்டார்சைக்கிள் பிரபலமானது.

நடிகர்கள் அமிதாப் பச்சனும் தர்மேந்திராவும் 'ஷோலே' படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் இதுபோன்ற மோட்டார்சைக்கிளில் வலம் வந்தனர்.

இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிராக மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு பாண்டியா தலைமை தாங்குகிறார்.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) முதல் ஆட்டம் நடைபெறுகிறது. ராஞ்சி, டோனியின் சொந்த ஊராகும்.