மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்கட்கிழமை (ஏப்ரல் 21) வெளியிட்டது.
இதில் கடந்த ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் ‘ஏ+’ பிரிவில் உள்ளனர்.
‘ஏ’ பிரிவில் முகம்மது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஹார்திக் பாண்டியா, முகம்மது ஷமி, ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளனர்.
சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
ரிங்கு சிங், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் உள்ளிட்ட 19 வீரர்கள் ‘சி’ பிரிவில் இருக்கின்றனர்.
இம்முறை ஏ+, ஏ, பி, சி பிரிவுகளில் உள்ள வீரர்களுக்கான சம்பள விவரத்தை பிசிசிஐ வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு ஏ+, ஏ, பி, சி பிரிவுகளில் உள்ளவர்களுக்கு முறையே ரூ. 7 கோடி, ரூ. 5 கோடி, ரூ. 3 கோடி, ரூ. 1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.