ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த ஆக இளம் வீரர்

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த ஆக இளம் வீரர்

fallback-0
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புதன்கிழமை (ஜனவரி 18) நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததைக் கொண்டாடும் ஷுப்மன் கில் (இடது). படம்: ஏஎஃப்பி

18 Jan 2023 - 8:38 pm

1 mins read

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புதன்கிழமை (ஜனவரி 18) ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பந்தடித்த இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில், வெறும் 145 பந்துகளில் இரட்டை சதமடித்து, இரட்டை சதமடித்த ஆக இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

23 வயது, 132 நாள்களில் இந்தச் சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். இதற்குமுன், இஷான் கிஷன் (24 வயது, 145 நாள்கள்) ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய கிரிக்கெட் ஆவார் ஷுப்மன் கில். இவருக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரோகிட் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் இச்சாதனையைப் படைத்திருந்தனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆக விரைவாக 1,000 ஓட்டங்களை எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார் ஷுப்மன் கில்.