கிரிக்கெட் தரவரிசை: ஷுப்மன் கில் முதலிடம்

1 mins read
8145c7df-9b62-485c-ac0a-4412bd7b79d3
அனைத்துலகக் கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில். - படம்: ஏஎஃப்பி

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பந்தடிப்பாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில்.

சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் டோனி, விராத் கோஹ்லிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெற்ற நான்காவது இந்தியர் இவர்தான்.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் முதலிரு போட்டிகளில் விளையாடாத ஷுப்மன், அடுத்த ஆறு போட்டிகளிலும் சேர்த்து 219 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் ஆசம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

அண்மையில், ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த (49) சாதனையைச் சச்சினுடன் பகிர்ந்துகொண்ட விராத் கோஹ்லி, மூன்று இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா ஆறாமிடத்தில் இருக்கிறார்.

அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். குல்தீப் யாதவ் (நான்காமிடம்), ஜஸ்பிரீத் பும்ரா (எட்டாமிடம்), முகம்மது ஷமி (பத்தாமிடம்) ஆகிய இந்தியப் பந்துவீச்சாளர்களும் ஏற்றம் கண்டனர்.

பங்ளாதேஷ் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசன் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஓரிடம் கீழிறங்கி, பத்தாமிடத்தைப் பிடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்