மியூனிக்: ஜெர்மனியின் மியூனிக் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கிண்ணத் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா 453.1 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
நார்வேயின் ஜீனெட் ஹெக் டியூஸ்டாட் 466.9 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், சுவிட்சர்லாந்தின் எமிலி ஜேகி 464.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.