சிங்கப்பூர் பூப்பந்துப் பொதுவிருது: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய லோ

சிங்கப்பூர் பூப்பந்துப் பொதுவிருது: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய லோ

1 mins read
1eab8528-8fc4-4af0-a890-fd0811361f71
சிங்கப்பூர் உள்ளரங்கில் மே 27ல் நடைபெற்ற சிங்கப்பூர் பேட்மின்டன் ஓப்பன் 2026 போட்டியில், ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் லோ கியன் இயூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முன்னணி பூப்பந்து வீரரான லோ கியன் இயூ, கேஎஃப்எஃப் சிங்கப்பூர் பூப்பந்துப் பொதுவிருதுப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (Round of 16) முன்னேறியுள்ளார்.

புதன்கிழமை (மே 27) போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடம்பியை 22-20, 19-21, 21-17 எனும் ஆட்டக்கணக்கில் வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் லோ. ஆட்டம் சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்றது.

முன்னதாக இம்மாதம் தாய்லாந்துப் பொதுவிருதுப் போட்டியின் முதல் சுற்றில் லோ, ஸ்ரீகாந்திடம் தோல்வியடைந்திருந்தார். இனி அவர் சிங்கப்பூர் பொதுவிருதின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மற்றோர் இந்தியரான எச். எஸ். கிரான்னோயைச் சந்திப்பார்.

லோ, சிங்கப்பூர் பொதுவிருதுப் போட்டியில் எஞ்சியுள்ள ஒரே சிங்கப்பூரராவார். முன்னதாக புதன்கிழமை இதர சிங்கப்பூரர்களான இயோ ஜியா மின், ஜேசன் டே இருவரும் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இயோ, நடப்பு உலக வெற்றியாளரான ஜப்பானின் அக்கானே யமாகுச்சியிடம் 21-16, 21-11 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றார். அதேபோல் டே, தைவானின் சி யு ஜென்னிடம் 21-19, 21-15 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியடைந்தார்.

குறிப்புச் சொற்கள்