மகளிர் தொழில்முறை உருட்டுப்பந்து சங்கத்தின் இவ்வாண்டுக்கான ஆகச் சிறந்த விளையாட்டாளர் பட்டத்தை சிங்கப்பூரின் நியூ ஹுவி ஃபென் வென்றுள்ளார்.
இந்தப் பட்டம் அவருக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 13) வழங்கப்பட்டது.
இப்பட்டத்தை வென்ற முதல் சிங்கப்பூர் வீராங்கனை மற்றும் இரண்டாவது ஆசிய வீராங்கனை எனும் பெருமை அவரைச் சேரும்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதை ஏந்திய 33 வயது நியூ, தமது கனவு நிறைவேறிவிட்டதாகத் தெரிவித்தார்.
அமெரிக்க வீராங்கனையான ஜோர்டன் ஸ்னோகிராஸ் இரண்டாவது இடம் பிடித்தார்.
பின்னடைவுகளைக் கண்டு கலங்க வேண்டாம் என்று இளம் உருட்டுப்பந்து வீரர்களுக்கு நியூ அறிவுரை கூறினார்.
தமது சாதனை இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நியூ விருப்பம் தெரிவித்தார்.

