தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் எஃப்1 கார்ப் பந்தயம்; வாகை சூடினார் ஜார்ஜ் ரசல்

2 mins read
f23b46ae-e866-4973-9bb2-4382ba3ee91b
தொடக்கம் முதல் இறுதிவரை சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்தார் ரசல். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

இரவுநேர கார்ப் பந்தயமான சிங்கப்பூர் ஏர்லைன்சின் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் கிண்ணத்தை மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசல் கைப்பற்றியுள்ளார்.

அவர் முதல்முறையாகச் சிங்கப்பூரில் வெற்றிபெற்றுள்ளார். மொத்தம் 62 சுற்றுகள் கொண்ட பந்தயத்தை ரசல் முதல் நிலையிலேயே தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் புல் குழுவின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மெக்லேரன் குழுவின் லேண்டோ நாரிஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

நாரிசுக்கும் வெர்ஸ்டாப்பனுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவிய வேளையில் தொடக்கம் முதல் இறுதிவரை சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்தார் ரசல்.

இந்நிலையில், இப்பருவத்திற்கான, அணிகளுக்கான வெற்றியாளர் கிண்ணத்தை மெக்லேரன் கைப்பற்றியது.

அந்த அணி சிங்கப்பூரில் 27 புள்ளிகள் எடுத்தது. இதன்மூலம் இப்பருவத்தில் அது 650 புள்ளிகளை எட்டியது. மற்ற ஒன்பது அணிகளாலும் 650 புள்ளிகளை இப்பருவத்தில் எட்டமுடியாது.

கடந்த ஆண்டும் அணிகளுக்கான கிண்ணத்தை மெக்லேரன் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓட்டுநர்களுக்கான புள்ளிப்பட்டியலில் 336 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் மெக்லேரன் அணியின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி. 

புள்ளிப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் நாரிஸ் 314 புள்ளிகளுடன் உள்ளார்

மூன்றாவது இடத்தில் 273 புள்ளிகளுடன் வெர்ஸ்டாப்பன் உள்ளார்.

இப்பருவத்தில் இன்னும் ஆறு பந்தயங்கள் மீதமுள்ளன. அடுத்த எஃப்1 கார்ப் பந்தயம் வரும் 20ஆம் தேதி அமெரிக்காவில் நடக்கிறது.

சிங்கப்பூர்வாசிகள் எஃப்1 பந்தயத்தைப் பெரிய திரைகளில் கண்டுகளிக்க மக்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

தெம்பனிஸ், பிடோக், ஹவ்காங், நீ சூன், ஜூரோங் வட்டாரங்களில் உள்ள ஐந்து சமூக மன்றங்களில் எஃப்1 பந்தயத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜூரோங் வட்டாரத்தில் உள்ள ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் கிட்டத்தட்ட 100 பேர் பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.

பயிற்சிச் சுற்று, தகுதிச் சுற்று, பந்தயம் என மூன்று நாள்களிலும் 16ஆம் ஆண்டு இரவுநேர கார்ப் பந்தயத்தைக் காண ஏறத்தாழ 300,600 ரசிகர்கள் திரண்டதாகச் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்