சிங்கப்பூர் இரவு நேரக் கார்ப் பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
சனிக்கிழமை (அக்டோபர் 4) நடந்த தகுதி சுற்றில் மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரசல் முதலிடத்தில் வந்தார்.
அவர் பந்தயத் தடத்தை 1.29.158 நொடிகளில் சுற்றி வந்தார்.
இரண்டாவது இடத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வந்தார். அவர் பந்தயத் தடத்தை 1.29.340 நொடிகளில் சுற்றி வந்தார்.
மெக்லேரன் அணியின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி மூன்றாவது இடத்தில் முடித்தார். அவர் பந்தயத் தடத்தை 1.29.537 நொடிகளில் சுற்றி வந்தார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் பந்தயத்தை வென்ற லேண்டோ நாரிஸ் ஐந்தாவது இடத்தில் வந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லூயிஸ் ஹேமில்டன் ஆறாவது இடத்தில் முடித்தார்.
ரசலுக்கும் வெர்ஸ்டாப்பனுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல் மெக்லேரன் அணி வீரர்களும் முதல் மூன்று இடங்களில் முடிக்கப் போராடுவார்கள் என்பதால் பந்தயத்தில் அனல் பறக்கக்கூடும்
சிங்கப்பூர் இரவு நேரக் கார்ப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.