தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

200 மீட்டர் ஓட்டம்: நூலிழையில் நழுவிய தங்கப் பதக்கம்

1 mins read
68d57af5-73a5-4787-90b8-8570d36d8f82
நடப்பு வெற்றியாளராக உள்ள சாந்தி பெரேரா, தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 20 பேரில் இரண்டாவது நிலையில் வந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய திடல்தட வெற்றியாளர் போட்டியின் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியுள்ளது.

சனிக்கிழமை (மே 31) தென்கொரியாவின் குமி சிவிக் விளையாட்டரங்கில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 28 வயது சாந்தி, 22.98 விநாடிகளில் பந்தயத்தை ஓடி முடித்தார்.

தங்கப் பதக்கம் பெற்ற சென் யூஜியே எடுத்துக்கொண்ட நேரம், 22.97 நொடிகள். இது, பெரேரா எடுத்துக்கொண்ட நேரத்தைக் காட்டிலும் 0.01 விநாடி குறைவு.

தகுதிச் சுற்றில் 20 பேர் போட்டியிட்டனர். அதில் ஜப்பானின் ரெமி த்சுருதா, பந்தயத்தை 23.37 நொடிகளுக்குள் நிறைவுசெய்து முதலிடம் வகித்தார். சாந்தி பெரேரா இரண்டாவது இடத்தைப் பிடித்த நிலையில் சென் யூஜியே மூன்றாவது இடம் பெற்றார்.

2023ல் தாய்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரேரா, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டருக்கான இரண்டு பந்தயங்களில் வெற்றியடைந்தார்.

ஆனால் இம்முறை பெரேரா 100 மீட்டர் இறுதிப் போட்டியில் சீனாவின் லியாங் சியாவ்ஜிங்கிடம் 0.04 நொடிகளில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். அடுத்து அவர் மே 31ஆம் தேதி 4x100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்கேற்விருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்