அனைத்துலகச் சிலம்பப் போட்டியில் சிங்கப்பூருக்கு நான்காமிடம்

1 mins read
93512284-bd06-4549-a487-140f01afe228
தங்கமும் வெள்ளியும் வென்ற சகானா சொக்கநாதன், வெண்கலம் வென்ற இரக்சித் நெவின் மணிவண்ணன், வெள்ளி வென்ற சுவேதா சொக்கநாதன் (இடமிருந்து, முன்வரிசை), ஆசான் மணிவண்ணன் (பின்வரிசை வலமிருந்து இரண்டாவது) நான்காம் இடத்துக்கான கிண்ணத்துடன். - படம்: மணிவண்ணன்

சிங்கப்பூர் பிரபஞ்ச ஆற்றல் குடில் குழுவினர் அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற எட்டாவது அனைத்துலகச் சிலம்பப் போட்டியில் பங்கேற்று நான்காம் நிலையில் வந்தனர்.

ஆசான் மணிவண்ணன் தலைமையிலான சிங்கப்பூர் அணி ஆகஸ்ட் 9, 10ஆம் தேதிகளில் மலேசியாவில் நடந்த அப்போட்டியில் பங்கேற்றது.

மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், இந்தோனீசியா, துபாய், அபுதாபி ஆகியவற்றிலிருந்து அணிகள் போட்டியிட்டன. 500க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் போட்டியிட்டனர்.

சிங்கப்பூர் அணியின் சகானா சொக்கநாதன், 17, தனித் திறன் பிரிவில் தங்கமும் தொடுமுறைப் பிரிவில் வெள்ளியும் வென்றார்.

சிங்கப்பூரின் சுவேதா சொக்கநாதன், 20, தனித் திறன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சிங்கப்பூரின் இரக்சித் நெவின் மணிவண்ணன், 17, தனித் திறன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

68 தங்கங்களை வென்ற மலேசிய அணி முதலிடத்தையும் 11 தங்கங்களை வென்ற இந்தியா இரண்டாம் இடத்தையும் பத்து தங்கங்களை வென்ற மலேசிய அடிதடி சிலம்ப அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

மலேசிய சிலம்பப் போர்க்கலை மன்ற ஆதரவுடன், அனைத்துலகச் சிலம்பப் போர்க்கலை சம்மேளனம் இணைந்து இப்போட்டியை நடத்தியது. சிரம்பான், டெர்மினல் விற்பனை மைய வளாகத்தில் போட்டி நடைபெற்றது.

சிலம்பக் கலையை ஆசியான் நாடுகளுக்கு மட்டுமன்றி, உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்குக் கொண்டுசேர்ப்பதே இப்போட்டிகளின் இலக்காகும்.

சிங்கப்பூர் அணியின் (இடமிருந்து) வெள்ளி வென்ற சுவேதா சொக்கநாதன், தங்கமும் வெள்ளியும் வென்ற சகானா சொக்கநாதன், வெண்கலம் வென்ற இரக்சித் நெவின் மணிவண்ணன், ஆசான் மணிவண்ணன்.
சிங்கப்பூர் அணியின் (இடமிருந்து) வெள்ளி வென்ற சுவேதா சொக்கநாதன், தங்கமும் வெள்ளியும் வென்ற சகானா சொக்கநாதன், வெண்கலம் வென்ற இரக்சித் நெவின் மணிவண்ணன், ஆசான் மணிவண்ணன். - படம்: மணிவண்ணன்
வெற்றிபெற்ற சிங்கப்பூர் அணி.
வெற்றிபெற்ற சிங்கப்பூர் அணி. - படம்: மணிவண்ணன்
குறிப்புச் சொற்கள்