வாள்வீச்சு ஃபொய்ல் பிரிவில் தங்கம் வென்ற சிங்கப்பூர்

1 mins read
555fb39f-e551-4a44-8738-6b1215562b11
சிங்கப்பூரின் ஆண்கள் ஃபொய்ல் பிரிவு வாள்வீச்சு வீரர்களான ரஃபாயல் டான் (இடது), ஜோனத்தன் லிம் ஆகியோருடன் சாமுவேல் ரோப்சன், ஜூலியன் சோ குழுவினர், தென்கிழக்காசிய விளையாட்டுகளின் இறுதிப் போட்டியில் மலேசியாவைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் பெற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேங்காக்: சிங்கப்பூர் வாள்வீச்சு அணியின் தங்க வேட்டை வியாழக்கிழமை (டிசம்பர் 18) அன்றும் தொடர்ந்தது.

ஜோனத்தன் லிம், சாமுவேல் ராப்சன், ஜூலியன் சோ, ரஃபாயல் டான் ஆகியோர் அடங்கிய அணி, மலேசியாவை 45-20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது. 2023ஆம் ஆண்டு கம்போடியாவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூரின் ஆண்கள் ஃபொய்ல் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

இது, இந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் வாள்வீச்சு அணி பெற்றிருக்கும் ஐந்தாவது தங்கமாகும்.

முன்னதாக, பெண்கள் சபர் பிரிவு அணியான ஜூலியட் ஹெங், கிறிஸ்டின் டான், ஜெர்மைன் டான், ஜே லிம் ஆகியோர் இறுதிப் போட்டியில் தாய்லாந்திடம் 45-32 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

2023ஆம் ஆண்டில், சிங்கப்பூர் 12 வாள்வீச்சு பிரிவுகளில் ஏழு தங்கங்களைப் பெற்று சாதனை படைத்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் எபி மற்றும் ஃபொய்ல் தனிநபர் போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்றனர். பெண்கள் எபி மற்றும் ஃபொய்ல் பிரிவு அணி தங்கப் பதக்கங்களுடன் ஒரு தனிநபர் சேபர் பிரிவு தங்கத்தையும் வென்றது.

குறிப்புச் சொற்கள்