ஜியு ஜிட்சுவில் சிங்கப்பூருக்குத் தங்கம்

1 mins read
cb4adba3-7c1e-4dbc-960c-61940a9c3c71
சிங்கப்பூரின் ஜியு ஜிட்சு வீரர் ஜெட் டான் ஆண்களுக்கான 77 கிலோகிராம் பிரிவில் தாய்லாந்தின் ஆன்ஜாய் சான்விட்டை வீழ்த்தி தங்கத்தைத் தட்டிச் சென்றுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேங்காக்: சிங்கப்பூரின் ஜியு ஜிட்சு வீரர் ஜெட் டான் ஆண்களுக்கான 77 கிலோகிராம் பிரிவில் தாய்லாந்தின் ஆன்ஜாய் சான்விட்டை வீழ்த்தி தங்கத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

நவமிண்டா கசாத்ரியாஹிராஜ் ஆகாயப் படைக் கழகத்தில் 18 வயது சிங்கப்பூரரான டான் 16க்கு 9 என்ற புள்ளி வித்தியாசத்தில் வாகை சூடினார்.

ஆட்டம் தொடங்கி சிறிது நேரம் வரை டானும் சான்விட்டையும் புள்ளிகளைப் பெறாமல் பொருதி ஒருவழியாக 4க்கு 4 என்று சமநிலையை எட்டினர்.

மூன்று நிமிட ஆட்டத்தில் ஒரு நிமிடம் எஞ்சியிருந்தபோது டானின் வேகம் சூடுபிடித்தது. எட்டுக்கு ஐந்து என்ற புள்ளிக் கணக்கில் சான்விட்டைப் பின்னுக்குத் தள்ளினார் டான்.

மாபெரும் இறுதிச்சுற்றுக்குச் செல்லும் முன் வியட்னாமின் வான் சூ, தாய்லாந்தின் பொல்புட் காம்பனாட்ர், இந்தோனீசியாவின் ஆர்ட்ஸ் பிரில்லியன்ட் பெர்ஃபெக்டோ ஆகியோரை டான் வென்றார்.

சிங்கப்பூர் அணியில் டான் ஆக இளையவர். சிங்கப்பூர் ஜியு ஜிட்சு ஓப்பன் 2023ல் எடை குறைவான பிரிவில் டான் வெற்றிபெற்றார்.

அதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற தென்கிழக்காசிய வட்டார ஜியு ஜிட்சு வெற்றியாளர்களுக்கான 21 வயதுக்குக் கீழ் உள்ளோருக்குரிய பிரிவில் டான் தங்கம் வென்றார்.

2023ஆம் ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற போட்டிகளில் சிங்கப்பூர் ஜியு ஜிட்சு அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தட்டிச் சென்றது.

குறிப்புச் சொற்கள்