பேங்காக்: தாய்லாந்து விளையாட்டு ஆணைய அரங்கில் புதன்கிழமை (டிசம்பர் 17) அன்று மலேசியாவை வீழ்த்தி, சிங்கப்பூரின் லி யூ லாங், தபிதா இயோ இணை, தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதலாவது அம்பெய்தல் கலப்பு ரீகர்வ் பிரிவு வெற்றியாளர்களாயினர்.
ஒரு நாள் முன்னதாக, அவர்கள் காலிறுதியில் பிலிப்பீன்சை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, அரையிறுதியில் இந்தோனீசியாவை அதே புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இந்தப் போட்டியில் சிங்கப்பூர் வென்ற ஒரே பதக்கம் 2013ஆம் ஆண்டு மியன்மாரில் கிடைத்தது. அப்போது நடந்த கலப்பு ரீகர்வ் அணி பிரிவில் சான் ஜிங் ரு, டான் சி லீ இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

