பாரிஸ்: தனது முதலாவது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் சிங்கப்பூரின் ஸெங் ஜியான், அதில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார்.
ஜூலை 28ஆம் தேதி, அதிபர் தர்மன் சண்முகரத்னம் உட்பட 6,650 பார்வையாளர்கள் முன்னிலையில், உலகத் தர வரிசையில் 52வது இடத்தில் உள்ள ஸெங் ஜியான், உலகத்தர வரிசையில் 73வது இடத்தில் உள்ள குரோவேஷியாவின் 44 வயது இவானா மலோபாபிச்சை 11-5, 11-3, 11-13, 11-6, 9-11, 13-15, 11-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்து 32 போட்டியாளர்கள் உள்ள அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
அடுத்த சுற்றில் ஸெங் ஜியான், இந்தியாவின் முன்னணி போட்டியாளரான ஸ்ரீஜா அகுலாவைச் சந்திப்பார். உலகத் தர வரிசையில் 25வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா, சுவீடனின் கிறிஸ்டினா கால்பெர்கை 4-0 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி கண்டார்.
ஒருவேளை ஸ்ரீஜாவை, ஸெங் ஜியான் தோற்கடித்து விட்டால் அடுத்து அவர் உலகத் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் சுன் யிங்ஷாவுடன் பொருதுவார்.