தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலகச் சுவர்ப்பந்து: காலிறுதிக்குள் நுழைந்து சாதித்த மலேசியாவின் சிவசங்கரி

1 mins read
810575f6-88fe-49c2-b3ef-76496a8966ed
எஸ். சிவசங்கரி. - படம்: ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் தேசிய சுவர்ப்பந்து வீராங்கனை எஸ். சிவசங்கரி உலக வெற்றியாளர் போட்டிக்கான காலிறுதிச் சுற்றில் நுழைந்து புதிய சாதனை புரிந்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்றுவரும் அந்தப் போட்டியில் புதன்கிழமை (மே 14) காலை நடைபெற்ற காலிறுதிக்கான மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் அமெண்டா சோபியை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

பின்னர், அடுத்த சுற்றில் எகிப்தின் சல்மா ஹானியை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். அந்த ஆட்டம் 47 நிமிடங்கள் நீடித்தது.

காலிறுதியில் ஒலிவியா வீவர் என்னும் அமெரிக்க வீராங்கனையை சிவசங்கரி எதிர்கொள்வார்.

தற்போது உலக சுவர்ப்பந்து வீராங்கனைப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ள சிவசங்கரி, உலக வெற்றியாளர் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து விளையாடும் ஒரே வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

காலிறுதிக்குள் நுழையும் சிவசங்கரி சாதனையை முதல்முறை புரிந்துள்ளார். மேலும், மலேசியர் ஒருவர் அனைத்துலக சுவர்ப்பந்து வெற்றியாளர் போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்திருப்பது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டவாது முறை நிகழ்ந்துள்ளது.

ஆகக் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட்டில் நிகழ்ந்த போட்டியில் மலேசியாவின் நிக்கல் டேவிட் காலிறுதிச்சுற்றுக்குள் நுழைந்ததே சாதனையாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்