பிரிஸ்பன்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் (டிசம்பர் 15) ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியுள்ளது.
டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து அசத்தியதால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 405 ஓட்டங்கள் எடுத்தது.
முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் அதிரடியாகத் தொடங்கினர்.
துவக்க வீரர்கள் இருவர்களையும் ஜஸ்பிரித் பும்ரா அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார். ஆனால் அடுத்து வந்த ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஜோடி ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கம் திருப்பினர்.
அந்த ஜோடி 241 ஓட்டங்கள் குவித்தது. ஹெட் 152 ஓட்டங்களும் ஸ்மித் 101 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்கள் குவித்துள்ளார். பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவுக்கு ஆறுதல் அளித்தார்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய பந்தடிப்பாளர்கள் அதிக அளவில் ஓட்டங்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.