லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் சிட்டி 2025-2026 பருவத்தின் முதல் இரண்டு ஆட்டங்களை ஒத்திவைக்குமாறு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
“அடுத்த ஆண்டு பிஃபாவின் ‘கிளப்’ உலகக் கிண்ண காற்பந்து போட்டி அமெரிக்காவில் நடக்கிறது. அது முடிந்தவுடன் உடனடியாக பிரிமியர் லீக்கில் விளையாடுவது வீரர்களுக்கு கடினமாக இருக்கும். அதனால் முதல் இரண்டு ஆட்டங்களை ஒத்திவைக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தோம், ஆனால் அது தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது,” என்று மான்செஸ்டர் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா தகவல் வெளியிட்டுள்ளார்.
பிஃபாவின் ‘கிளப்’ உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு பிரிமியர் லீக்கில் இருந்து செல்சி, மான்செஸ்டர் சிட்டி குழுக்கள் தகுதி பெற்றுள்ளன.
ஜூன் 15ஆம் தேதி கிளப்’ உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடங்குகின்றன. அது ஒரு மாதம் நடைபெறும். பிரிமியர் லீக் போட்டி ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.