தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிர்வாகியைப் பதவி நீக்கம் செய்த சவுத்ஹேம்டன்

1 mins read
7d6d8283-041b-4734-887b-e7e3a8ea809f
வில் ஸ்டில்லின் தலைமையின்கீழ் சவுத்ஹேம்டன் 13 ஆட்டங்களில் வெறும் 12 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலாந்தின் இரண்டாம் நிலை காற்பந்து லீக்கில் போட்டியிடும் சவுத்ஹேம்டன் குழு, அதன் நிர்வாகியான வில் ஸ்டில்லைப் பதவி நீக்கம் செய்துள்ளது.

தொடர்ந்து பல தோல்விகளைச் சந்தித்து வரும் சவுத்ஹேம்டன், மூன்றாவது நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.

சவுத்ஹேம்டனின் நிர்வாகியாகக் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புதான் வில் பொறுப்பேற்றார்.

ஆனால், அவரது தலைமையின்கீழ் சவுத்ஹேம்டன் 13 ஆட்டங்களில் வெறும் 12 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

தையடுத்து அது லீக் பட்டியலில் 21வது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்