பெல்ஜியத்தை வென்ற ஸ்பெயின் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி

பெல்ஜியத்தை வென்ற ஸ்பெயின் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி

2 mins read
அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின், பிரான்சைச் சந்திக்கும்
c0f26357-9326-4265-bbc7-5453c7e7e51a
ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்காக வெற்றி கோலை அடித்த மிக்கேல் மெரினோ கொண்டாடுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

லாஸ் ஏஞ்சலிஸ்: சனிக்கிழமை (ஜூலை 11) அதிகாலை மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தைத் தோற்கடித்து பெல்ஜிய வீரர்களின் இதயங்களை நொறுக்கியது. இந்த வெற்றி பிரான்சுக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு ஸ்பெயினை முன்னேறச் செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில், மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய மிக்கேல் மெரினோ ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அடித்த கோல், ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தது.

ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் அனுபவமிக்க கோல் காப்பாளர் திபாட் கோர்டுவா காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக இளம் கோல் காப்பாளர் சென்னே லேமன்ஸ் களமிறக்கப்பட்டார்.

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் இரு குழுக்களும் 1-1 என்று சமநிலையில் இருந்தபோது, ஸ்பெயின் தொடுத்த தாக்குதலை முறியடிக்கும் முயற்சியில் பெல்ஜியத்தின் கோல் காப்பாளர் செய்த தவற்றால், பந்து மெரினோவின் பாதையில் சென்று விழுந்தது. மிக்கேல் மெரினோ பந்தை விரைவாக வலைக்குள் அனுப்பினார்.

அது லேமன்சுக்கு மனதை நொறுக்கும் தருணமாக இருந்தாலும், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்ச்சுகலுக்கு மரண அடியைக் கொடுத்திருந்த மெரினோ, 70,492 பேர் திரண்டிருந்த ஸ்பானிய ரசிகர்களை நோக்கிக் கொண்டாடினார்.

ஆட்டம் முடிவடைந்ததும், மனமுடைந்திருந்த லேமன்சைக் கட்டித்தழுவ கோர்டுவோ வெளியே வந்தார். அதேவேளையில், பெல்ஜியத்தின் வயதான ‘பொற்காலத் தலைமுறை’யின் மற்ற உறுப்பினர்கள் அசைவற்று, நம்பமுடியாத நிலையில் நின்றுகொண்டிருந்தனர்.

மாற்று வீரராக வெளியேற்றப்படுவதற்கு முன்பு களத்தில் தொடர்ந்து இருக்க விரும்பியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த 34 வயதான கோர்டுவோ, லேமன்சுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.

“நான் அவரை இறுக அணைத்துக்கொண்டேன். அவர் ஒரு சிறந்த கோல் காப்பாளர். இது போன்ற செயல்களால் நீங்கள் மேலும் வலிமை பெறுவீர்கள்,” என்று தனது சக வீரரைப் பற்றி கோர்டுவோ கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஸ்பெயினைப் பொறுத்தவரை, கட்டித்தழுவி உற்சாகப்படுத்திக் கொண்ட பிறகு, கவனம் உடனடியாக பிரான்சுடனான அவர்களின் பிரம்மாண்டமான மோதலை நோக்கித் திரும்பியது.

குறிப்புச் சொற்கள்
லாஸ் ஏஞ்சலிஸ்ஸ்பெயின்பெல்ஜியம்

தொடர்புடைய செய்திகள்