ஃபிஃபா தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்

2 mins read
cf0d9d9f-8f9f-4725-9b1e-bf073f382c3e
ஸ்பெயின் தேசிய காற்பந்துக் குழு - படம்: ஏஎஃப்பி

சூரிக்: அனைத்துலக காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) தரவரிசை​யில் ஸ்பெ​யின் தேசிய காற்பந்துக் குழு முதலிடம் பெற்று 2025ஆம் ஆண்டை நிறைவு செய்​துள்​ளது.

2025ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஆடவர் காற்​பந்து அணி​களின் தரவரிசை பட்​டியலை ஃபிஃபா வெளி​யிட்​டுள்​ளது. முதல் பத்து இடங்​களில் எந்​த​வித மாற்​றமும் இல்​லை. ஸ்பெ​யின் அணி 1877.18 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் தொடர்​கிறது.

அர்​ஜெண்​டினா (1873.33), பிரான்ஸ் (1870), இங்​கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46), போர்ச்​சுகல் (1760.38), நெதர்​லாந்து (1756.27), பெல்​ஜி​யம் (1730.71), ஜெர்​மனி (1724.15), குரோவேஷியா (1716.88) ஆகிய அணி​கள் முறையே 2 முதல் 10வது இடங்​களில் உள்​ளன.

ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து மொரோக்கா மட்டும்தான் முதல் 15 இடங்களுக்குள் வந்துள்ளது. அது 11வது இடத்தைப் பிடித்துள்ளது. 12வது இடத்தில் இத்தாலி, 13வது இடத்தில் கொலம்பியா, 14வது இடத்தில் அமெரிக்கா, 15வது இடத்தில் மெக்சிகோ ஆகியவை உள்ளன.

அமெரிக்கா இரண்டு இடங்கள் முன்னேறி 14வது இடத்தைப் பிடித்து, வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபியன் சங்கக் காற்பந்துக் கூட்டமைப்பிலேயே (CONCACAF - கொன்ககாஃப்) தலைசிறந்த காற்பந்து நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

அமெரிக்கக் காற்பந்துக் குழுவின் நிர்வாகி மௌரிசியோ போச்செட்டினோவின் கீழ், அமெரிக்கக் குழு அண்மைய மாதங்களில் நிலையாக விளையாடி வருகிறது. கடந்த ஐந்து போட்டிகளில் அவர்கள் எந்த ஆட்டத்திலும் தோல்வி கண்டதில்லை. இதில் பராகுவே, உருகுவே அணிகளுக்கு எதிராக அமெரிக்கக் குழு பெற்ற அற்புதமான வெற்றிகளும் அடங்கும்.

மெக்சிகோ ஒரு இடம் சரிந்து 15வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேவேளையில் வட அமெரிக்கக் கண்டத்தின் சக நாடான கனடா 27வது இடத்தில் நிலையாக உள்ளது. உலகக் கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு இன்னும் ஆறு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் மூன்று நாடுகளும் சொந்த மண்ணில் கிடைக்கும் ஆதரவைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்​தியா 1079.52 புள்​ளி​களு​டன் 142வது இடத்​தில் உள்​ளது. அடுத்த தரவரிசை பட்​டியல் வரும் ஜனவரி 19ஆம் தேதி வெளியிடப்​படும் எனவும் ஃபிஃபா தெரி​வித்​துள்​ளது.

குறிப்புச் சொற்கள்