ஒலிம்பிக் காற்பந்து: பிரான்சை வீழ்த்தி தங்கம் வென்ற ஸ்பெயின்

1 mins read
1091eb37-5779-4160-9ba4-699372884563
தங்கப் பதக்கம் வென்று கொண்டாடிய ஸ்பானியக் காற்பந்து ஆட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான காற்பந்துப் போட்டியில் ஸ்பெயின் தங்கம் வென்றுள்ளது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினும் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்சும் மோதின.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரான்ஸ் கோல் போட்டு முன்னிலைக்குச் சென்றது.

ஆனால், அதை அடுத்து கோல் வேட்டையில் தீவிரம் காட்டிய ஸ்பெயின் 3-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

மனந்தளராது போராடிய பிரான்ஸ் மேலும் இரண்டு கோல்களைப் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டம் 3-3 எனும் கோல் கணக்கில் முடிய, வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதல் நேரம் தேவைப்பட்டது.

கூடுதல் நேர ஆட்டத்தில் ஸ்பெயின் இரண்டு கோல்களைப் போட்டு 5-3 எனும் கோல் கணக்கில் ஆட்டத்தைக் கைப்பற்றியது.

இதற்கிடையே, மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் மொரோக்கோவும் எகிப்தும் மோதின.

இதில் 6-0 எனும் கோல் கணக்கில் கோல் மழை பொழிந்து மொரோக்கோ வெண்கலம் வென்றது.

குறிப்புச் சொற்கள்