தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரேசில் காற்பந்து வீரர் பிணையில் விடுவிப்பு

1 mins read
0ec08b4b-26d8-4d12-b18d-7fed658df7e9
பாலியல் குற்றத்திற்காக நாலரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட டேனி ஆல்வெஸ். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

பார்சிலோனா: பாலியல் குற்றத்திற்காக நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரேசில் காற்பந்து வீரர் டேனி ஆல்வெஸ் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆல்வெஸ் கிட்டத்தட்ட கால்வாசி தண்டனையை அனுபவித்துவிட்ட நிலையில், ஒரு மில்லியன் யூரோ (S$1.08 மில்லியன்) பிணைத்தொகையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரேசில், ஸ்பெயின் என இருநாட்டுக் கடப்பிதழ்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்பெயினைவிட்டு அவர் வெளியேறவும் கூடாது; வாரந்தோறும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணை ஆல்வெஸ் அணுகவும் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்