தென்னாப்பிரிக்காவில் தற்போது மகளிர் கிரிக்கெட் அணிக்கான டி20 உலகக்கிண்ணப் போட்டி நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆட்டத்தில் ஒரு சில நடவடிக்கையை முன்கூட்டியே முடிவுசெய்யும் மோசடியை செய்யக்கோரி பங்ளாதேஷ் வீராங்கனை ஷைபுல் அலமிடம் மோசடிக் கும்பல் அணுகியுள்ளது.
அலம் உடனடியாக அது குறித்து அனைத்துலகக் கிரிக்கெட் மன்றத்திடம் புகார் அளித்ததாகப் பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
தற்போது அனைத்துலகக் கிரிக்கெட் மன்றம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆட்டத்தில் ஒரு சில நடவடிக்கைகளை முன்கூட்டியே முடிவுசெய்வது சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றிபெற வாய்ப்பாக அமையும்.
டி20 உலகக்கிண்ணப் போட்டியின் இறுதியாட்டம் பிப்ரவரி 26ஆம் தேதி நடக்கவுள்ளது.

