தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேன்யூவை வீழ்த்திய ஸ்பர்ஸ்

1 mins read
97ac89ea-3729-40cc-a957-74f289dc4b77
ஸ்பர்சின் வெற்றி கோலைப் போட்ட ஜேம்ஸ் மெடிசன் (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் தோற்கடித்தது.

இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 17) ஸ்பர்ஸ் குழுவின் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஸ்பர்சின் வெற்றி கோலை ஜேம்ஸ் மெடிசன் போட்டார்.

எதிர்பார்த்த அளவுக்கு மெடிசன் செயல்படவில்லை என்று ஆட்டத்துக்கு முன்பு அவர் விமர்சிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதத்தில் அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

அதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை யுனைடெட்டுக்கும் எதிரான ஆட்டத்தில்தான் அவர் முதன்முறையாகக் களமிறங்கினார்.

அண்மையில், யுனைடெட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் ரோய் கீன், மெடிசனைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

லீக் பட்டியலில் முதல் ஆறு இடத்தில் ஸ்பர்ஸ் குழுவை மெடிசனால் உயர்த்த முடியாது என்று அவர் அடித்துக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பற்றி மெடிசன் ஆட்டத்துக்கு பிறகு கருத்துரைத்தார்.

“ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கும். ஆனால் எனது செயல்பாடு மூலம் அவர்களுக்குப் பதிலளிக்க விரும்பினேன்,” என்றார் மெடிசன்.

இதுவரை 25 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள ஸ்பர்ஸ் 30 புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்