இலங்கை கிரிக்​கெட் வாரியத் தலை​வர், உறுப்பினர்கள் திடீர் பதவி விலகல்

இலங்கை கிரிக்​கெட் வாரியத் தலை​வர், உறுப்பினர்கள் திடீர் பதவி விலகல்

2 mins read
da4067d2-7a83-4687-af28-5e83972a773f
ஷம்மி சில்வா. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

கொழும்பு: இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​தின் தலை​வர் ஷம்மி சில்வாவும் அதன் மற்ற உறுப்பினர்களும் ஒருசேர பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக அனைத்துலக அரங்கில் இலங்கை அணி​யின் செயல்​பாடு​கள் மோச​மாக இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த மார்ச் மாதத் தொடக்​கத்​தில் இருந்தே ஷம்மி சில்​வாவைப் பதவியி​லிருந்து நீக்​குவது தொடர்பாக இலங்கை அரசு பரிசீலித்து வந்​ததாகக் கூறப்படுகிறது.

கிரிக்​கெட் வாரி​யத் தலை​வர் பதவியி​லிருந்து விலக வேண்​டும் என்ற கோரிக்​கைகள் எழுந்த நிலை​யில், சில்வா கடந்த வாரம் இலங்கை அதிபர் அனுரா குமார திச​நாயகவை சந்​தித்​துப் பேசி​யிருந்​தார். அப்​போது அவரது பதவி விலகலை எதிர்பார்ப்பதாக அதிபர் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் ஷம்மி சில்​வா.

கொழும்பு நகரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) கிரிக்கெட் வாரியத்​தின் செயற்​குழு உறுப்​பினர்​கள் சிறப்புக் கூட்​டம் நடை​பெற்​றது.

ஏறக்குறைய சுமார் மூன்று மணி நேரம் நீடித்த ஆலோ​சனைக்​குப் பிறகு இலங்கை கிரிக்​கெட் வாரி​யத் தலை​வர், உறுப்​பினர்​கள் அனை​வரும் பதவியி​லிருந்து மொத்தமாக வில​கு​வ​தாக அறிவிப்பு வெளியானது.

அதன் பின்னர் இடைக்​கால குழு ஒன்று கிரிக்கெட் வாரி​ய நிர்​வாகப் பணி​களை மேற்​கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து வருகிறது.

எனினும், ஷம்மி சில்வாவின் பதவி விலகல் சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது. அரசி​யல் தலை​யீடு காரண​மாகவே சில்வா வாரியத் தலைவர் பதவியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுவதை அடுத்து, அனைத்துலக கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இது தொடர்பாக எதிர் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்​பரில் அப்​போதைய இலங்கை விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் சில்​வாவை பதவியி​லிருந்து நீக்​கிய​போது, கிரிக்​கெட் வாரிய நிர்​வாகத்​தில் அரசி​யல் தலை​யீடு இருப்​பது ஐசிசி-​யின் விதி​முறை​களுக்கு எதி​ரானது எனக் கூறி, இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​தின் உறுப்​பினர் தகு​தியை ஐசிசி உடனடி​யாக ரத்து செய்​தது.

அதன் பின்னர் தனக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து நீதி​மன்​றத்தை அணுகினார் சில்வா. சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவர் மீண்​டும் பத​வி​யில் அமர்த்தப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்