தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100 விக்கெட்: ஹசரங்கா சாதனை

1 mins read
2e14247d-3beb-4873-a391-309b85cd4cf4
அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்கா. - படம்: ஏஎஃப்பி

தம்புலா: இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கா டி20 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தம்புலாவில் நடந்த இரண்டாவது டி20 போட்டியின்போது 28 வயதான ஹசரங்கா இச்சாதனையைப் படைத்தார். இதுவரை 63 போட்டிகளில் விளையாடி, 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் இவர்.

அனைத்துலக டி20 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் இவர். முன்னதாக, வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 72 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலும் வென்றிருந்ததால் அவ்வணி தொடரையும் கைப்பற்றியது.

மூன்றாவது, கடைசி டி20 போட்டி புதன்கிழமை (பிப்ரவரி 21) நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்