மோசமான தோல்வியைத் தழுவிய இலங்கை

மோசமான தோல்வியைத் தழுவிய இலங்கை

1 mins read
369662d7-d3f6-4d4c-bce9-37c0b325f52d
படம்: ஏஎஃப்பி -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது.

இப்போட்டி ஆக்லாந்தில் நடந்தது.

முதலில் பந்தடித்த நியூசிலாந்து 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்கள் எடுத்தது.

சிறப்பாகப் பந்தடித்த ஃபின் ஆலன் 51 ஓட்டங்கள் குவித்தார். சமிக்க கருணாரத்னே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஓட்டம் எடுக்கத் தடுமாறியது.

அவ்வணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 76 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

சிறப்பாகப் பந்துவீசிய ஹென்றி சிப்லி 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது நியூசிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்