சானியா-ஹிங்கிஸ் உலக சாதனை

சானியா-ஹிங்கிஸ் உலக சாதனை

1 mins read
8cb64ff1-95cb-49b4-aef0-7a2f94c8e48b
-

சிட்னி: டென்னிஸ் ஆட்டத்தில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருகிறது இந்தியாவின் சானியா மிர்சா= சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை. கடந்த ஆண்டு இருவரும் இணைந்து 9 பட்டங்களைக் கைப்பற்றினர். இதனால் உலகத் தரவரிசையில் முதலிரு இடங்களும் அவர்களைத் தேடி வந்தன.

அண்மையில் பிரிஸ்பனில் நடந்த போட்டியிலும் வாகை சூடி இவ்வாண்டையும் வெற்றியுடன் தொடங்கிய அந்த இணை, அடுத்ததாக சிட்னி போட்டித் தொடரின் இறுதிச் சுற்றிலும் நுழைந்தது. நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் ரலுக்கா ஒலரு (ருமேனியா) - யரோஸ்லாவா ஸ்வெடோவா (கஸக்ஸ்தான்) இணையை 4-3, 6-3, 10-8 எனப் போராடி வீழ்த்தியது சானியா இணை.

இதன்மூலம், மகளிர் இரட்டையர் பிரிவில் ஆக அதிகமாக தொடர்ந்து 29 போட்டிகளில் வென்ற முதல் இணை என்ற உலக சாதனையையும் அவர்கள் படைத்தனர்.